தீரா நோயும் , ஆறா துயறும் !
>>> இவன் : பிறைத்தமிழன் <<<
==============================
------------------------------------------------------------ -------------------------
>> இது யாரையும் புண்படுத்த என்னாத ,
புண் பட்டவனின் ( கற்பனை ). <<<
------------------------------------------------------------ -------------------------
சீருடை அணிந்த சிறப்புக் கொள்ளையர்
அவர் வாழ்வில் ,
காக்கியும் , வெள்ளையும் கலந்த கும்மாளம்
அதெற்கென ,
சிவப்புக் கோட்டையில் செதுக்கி சிம்மாசனம்
அங்கேநடப்பது ,
ஆயுள் முழுதும் அதிகாரப் பிச்சை !
அதை செயலாக்க ,
கடைத் தெருவெல்லாம் கப்பம் வசூல்
இந்த , அலுவலுக் கென ,
புதுக் காரிலும் ,வேனிலும் கடமை ஊர்வலம் !
வெள்ளைத் துணிகளின் வெகுஜனக் கரைகள் ,
சொல்லைக்கேட்டு சுறு சுறுப்பாகி !
கொள்ளை என்ற கொள்கைக்காக , இல்லை
வரம்புஇவர்களுக்கென்றும் !
தினமும் தேரும் ,எக்கச் சக்க எச்சைத் தீனி
அதை உண்டு பெறுவார் ,
ஓர் ஆயிரம் சாபம் ! அதனால் ,
வயிறு முட்ட வளர்ந்திடாதோ வஞ்சப் புற்று ?
இப்படி சந்தி சிரிக்க, தன் சந்ததி சிறக்க ,
சேர்த்து வைத்த செல்வம் தானே ,
தீரா நோயும் , ஆறா துயறும் !
இவர் தா னன்றோ சீருடையணிந்த
சிறப்புக் கொள்ளையர்.....!!!
>>> இவன் : பிறைத்தமிழன் <<<
==============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக