வியாழன், 21 பிப்ரவரி, 2013

புத்தாடை பூணி ,


  உள்ளங்கள்   
                       ஒன்  றிணைந் திருக்க !
 உயர்  ஈகை  
                      எங்கும்  பொழிந் திருக்க !
 உலகம் 
           ஒரு  கொடியின் கீழ்   நிலைத் திருக்க !
 வல்லோன்   வகுத்த 
          வான்  மறை   எங்கும்  செழித் திருக்க !
 மனித  னெனும் 
                              பிறவிக்  கடன் தீரா  திருக்க !
 மாநபி  உம்மத் தெனும் 
                                மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ 
                                         ஏந்தல்  நபி  வழிநடக்க !

புத்தாடை  பூணி ,
  ஃ பித்ராவை  பேணி  !
பிரத்யோக   வணக்கதிற்கே  இன்று
திரளுதாம்   தீன்குலப்  பேரணி !
----------------------------------------------------------------------------------
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர்  !
லாயிலாஹ  இல்லல்லாஹு ,
அல்லாஹுஅக்பர்  !
அல்லாஹு  அக்பர்  ,
வலில்லாஹில்  ஹம்து   !!!
----------------------------------------------------------------------------
நேர்  கொண்ட வழியில் ,
சீர்  பெற்றுச் செழித்து  , சிறப்புற்று  விளங்க

சிகரோனிடம்  சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,

வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்களை 

தீனுலகோருக்கு  தெரிவிப்பது
பிரியமுள்ள  :~  இவன்  >> பிறைத்தமிழன் <<----

>         " சில்லரைப்பசி "            
>   பிணம்  தின்னும்   கழுகுகளும்   தன்
>   இனம்    தின்னா  திருக்கக்   கூடும் !
>   பணம்   பண்ணும்   பாருலகோர்
>   பசி   என்றடங்  கிடுமோ  ?                          
>   இதயம்  இருன்டிருக்க,
>   இதழ்கள்  வறண்டிருக்க,
>   செயற்கைச்  சிரிப்பாலே
>   செருக் கங்கே    மறைந்திருக்க !
>   வஞ்சம் வளர்ப்பதிலே
>   வல்லமை  பெற்றோரின்
>   சில்லரைப்  பசி
>   சிறிதேனும்  குறையாதோ ?
>   கல்லறைப்  பயணமும்
>   காசொடுதான்  போவாரோ ?
>   பணத்தை  பையில் வைத்து ,
>   பலபேர்  கையில்  வைத்து !
>    உழைப்பே  ஒன்றுமில்லா ,
>   தொழிலொன்று தேர்தெடுத்து !
>   வருமைச் சுமை  கொண்டு ,
>   வருவோரை இனம் கண்டு !
> தேவைகளை தீர்த்துவைக்கும் ,
> தெய்வப்பிறவி தானென
>    வரவுமட்டும்  கணக்கிட்டு .
>    வட்டிஎன்ற பெயருமிட்டு !
>   சொத்துகளை  குவித்திடுவார் ,
>   செத்தபின்பும்  சீரழிய !
>   கட்டுகின்ற  கூத்துகளும் ,
>   கொட்டுகின்ற  மேளங்களும் !
>   பச்சை  ஓலையிலே ,
>   படுக்கையினை  செய்த பின்னே !
>   பட்டுச்    சரிகை என ,
>   பகட்டான  ஆடைகளும் !
>   விட்டுப்  பிரிந்திடுவார் ,
>   வேறு வழி  இல்லையென !
>   ஒட்டுத்   துணிகூட ,
>   ஒருவருக்கும்  சொந்தமில்லை !
>   உலகைவிட்டுச் செல்லும்முன் ,
>   உணர்ந்துகொள்  மானிடனே !
>   உயிர் குடிக்கும்  வட்டியினை,
>   உண்டு   நீ  வாழாதே  !
>   பிணம்  தின்னும் கழுகு என்ற ,
>   பெயரேதும்  வாங்காதே !!!
===============================================
   இது ஒரு
   வட்டியில்   மூழ்கி  வாழ்வை   தொலைத்தவனின்
   வயிற்றெரிச்சல்  ....................................................!
===============================================
>> இவன் :~  பிறைத்தமிழன் .
                  தீரா  நோயும் , ஆறா  துயறும் !  
-------------------------------------------------------------------------------------
    >>  இது யாரையும்  புண்படுத்த என்னாத ,
       புண் பட்டவனின்  ( கற்பனை ). <<<
------------------------------
-------------------------------------------------------
  சீருடை  அணிந்த   சிறப்புக் கொள்ளையர்
அவர்  வாழ்வில் ,
 காக்கியும் , வெள்ளையும்   கலந்த  கும்மாளம்
அதெற்கென ,
சிவப்புக்  கோட்டையில்   செதுக்கி சிம்மாசனம் 
அங்கேநடப்பது ,
  ஆயுள் முழுதும்  அதிகாரப்  பிச்சை !
அதை செயலாக்க ,
  கடைத் தெருவெல்லாம்     கப்பம்   வசூல் 
இந்த ,  அலுவலுக் கென ,
புதுக் காரிலும் ,வேனிலும்  கடமை  ஊர்வலம் !
  வெள்ளைத் துணிகளின்  வெகுஜனக் கரைகள் , 
சொல்லைக்கேட்டு  சுறு சுறுப்பாகி !
கொள்ளை   என்ற  கொள்கைக்காக , இல்லை
வரம்புஇவர்களுக்கென்றும் !
தினமும்  தேரும் ,எக்கச் சக்க  எச்சைத் தீனி
அதை    உண்டு   பெறுவார் , 
ஓர்  ஆயிரம்   சாபம் !  அதனால் ,
வயிறு முட்ட  வளர்ந்திடாதோ  வஞ்சப்  புற்று ?
இப்படி    சந்தி  சிரிக்க,   தன் சந்ததி  சிறக்க ,

     சேர்த்து  வைத்த     செல்வம்    தானே ,
தீரா  நோயும் , ஆறா  துயறும் !  
    இவர்   தா னன்றோ   சீருடையணிந்த 
சிறப்புக் கொள்ளையர்.....!!!

>>> இவன் : பிறைத்தமிழன் <<< 
==============================