ஞாயிறு, 20 மே, 2012

தண்ணி லாரிகள்..!



சென்னை  வீதிகளில்  தண்ணி  தெளிக்கும்  லாரிகள்  !
அதன் பின்னே  எழுதப்பட்ட  சில  பொன்னான  வரிகள் !

 குடிநீரை சேமிப்போம் ,
 குறையின்றி  நீர்பெருவோம் !
 பொன்மொழிக்குக்  கீழே ,
  புரிந்தும்  புரியா  புது   விளக்கம் !

இதோ :~
                  சிதைந்து தொங்கும் ,
                  சிறிய , பெரிய  நீர் திறக்கும்  குழாய்கள் !
                  சாலையெங்கும்  சிந்திச் சீரழியும் ,
                  சென்னைக்  குடிநீர்  !

இப்படிக்கு :~
                  சிறிதும்   சொரணையின்றி  லாரியின்  ஓட்டுனர் ,

மற்றும் :~
                  சிரிக்கத்  தெரியாத   சிடு  மூஞ்சி ( கிளீனர்  ) உதவியாளர் !

                  வட்ட ,வட்டம்   வாக்களித்து , 
                  வக்கனையாய்   பேசுவோரும்  !

                  எமனை  கண்டது போல் ,
                  எங்கும்  திரும்பா கடிவாள குதிரைகள் !
                  ஏன் ? என்ற கேள்வியை 
                  ஏனோ  தொலைத்து விட்ட,
                  எலும்பில்லா  நாக்குகள் !
                  மயிர்நீத்தும் உயிர் வாழும்  ,
                  மாற்றத்தை  விரும்புகின்ற                  
                  மானமுள்ள   மனிதர்கள் !
                  மோதத் தான்    முடியுமோ ,
                  முறை கேட்ட  வாகனத்தில் !
---------------------------------------------------------------------------------------------------
   இவன் :~  >>>  பிறைத்தமிழன் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக