வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஆண்ட பரம்பரையா ?

ஆண்ட பரம்பரையா ? நீ  இன்று
அடிமை இளம்பிறையா ?
அகிலக் கலங்கரையா ? கண்ணீர் -
அலை தொடும் கடற்க்கறையா  ?

தீன் குல மாந்தரின்  கர்ப்ப வயிறுகளை

கால்களால் கிழித்திடும் காவி எருமைகள்
மிகுந்து மேலோங்கி  திரியுதே
புகுந்து கன்னியர் மானம் உரியுதே

ஐயோ கற்ப்பினை அளித்திடும் காட்சியை

படமாக்கி காட்டிடும் ஈனம் இங்கு நிகலுதே
முக்கடல் காரி துப்பி உமிளுதே    இதை

கூட்டணி வேட்டி    ஓட்டுண்ணித்  தலைவர்கள்

கூடிப்பார்த்ததே  வேடிக்கை - அந்த ஜாதிக்கு
இவர் எல்லாம்  ஜோடிக்கை -அவர்
உச்சப்பதவிக்கு உன் விழா எலும்புதான்
என்றுமே ஏணிக்கை

ஆத்திர ரத மத யாத்திரைக் கூத்திடும்

அத்துவானிகள்  ஒருபுறம் ,-சாத்தானின்
மூத்திரம் சதா ஓடிடும்  பாத்திர நடிகைத்
தட்டுவானிகள்  ஒருபுறம் ,
வட்டித்துட்டுவானிகள்  ஒருபுறம்

சனக்கொலை சாய்த்திடும்  இனக்கொலை காரருக்கு

சகல சுதந்திரமும்  கிடைக்குது
அரசுச்  சாட்சியமும் தடயத்தை மறைக்குது

அயோத்தி  காயங்கள்  ஆறிட  மருந்துகள்  அவனிடுவானா ?

இல்லை  அனைவர்க்கும்  க பநிடுவானா ?

இத்  தகாது கண்டு ஜிகாது செய்வோருக்கு வெற்றி கிட்டுமா ?

முஸ்லிம் சமுதாயம் தான்  ஏற்றம் கொட்டுமா ? ? ?....
---------------------------------------------------------------------------------------------------------
குஜராத் கலவரத்தின்போது------
       >>>நன்றி  ::      பேராசிரியர்  அப்துர்ரஹ்மான்  அவர்களுக்கு
===================================================================
   >>>  இவன்   >> பிறைத்தமிழன்

வியாழன், 19 மே, 2011

முகம் தெரியா முதிர் கன்னிகள் !

" எளிமை நிறுத்தி "


செல்வந்தன் இல்லத்திருமணம்

ஏழைக்  குமர்களுக்கு  
எதிராக  விடுக்கப்பட்ட 
போர்ப்  பிரகடனம் !
 
இந்த   யுத்தத்தில்   
இன்னும்   ஏராளமான  ,

முகம்    தெரியா ,
முதிர்   கன்னிகள்  !
 
மூவாறு   வருடங்கள் , 
முத்தாய்   வளர்த்த   மகளை ,
 
முந்தானால்   வந்தவன்    
கொத்தாய்   அள்ளி   செல்ல ,
 
பத்தாய்   சில   லட்சங்களும்,  
பகட்டாய்   பல   ஆபரணங்களும்...!.
 
என்ன   கொடுமை..
ஏன்  இந்த   மடமை ?

பணத்தையும் ,  
பகட்டையும்   நேசிப்பவன்,  

செல்வத்தையும்   செருக்கயுமே ,
செல்ல  மகளுக்கு  
சீதனமாய்    தருவான்  !

இளைஞனே   விற்க்கப்படுகிறாய்..  
இதற்க்கு   நீ   வெட்கப்பட வில்லையா  ?
 
இறுதியில்   இட்டு  செல்வது  ஒன்றுமில்லை..
நீ   விட்டு  செல்பவை .. யாவும்   உனதில்லை  !
 
ஆழங்களை   அழகாய்  படைத்தவன்,
பெண்ணினத்தின்   பெருமையினை ,
சொல்ல    வில்லையா ?
 
இறைவன்   படைத்த    உயிரனம்,
இல்லறம்   காணும்போது .. 
பிறவியின்  பயனை   அடைகிறது !
 
ஒரு   மனிதன்   முழுமை  பெறுவதற்கு , 
பெண்    தேவை !
 
அந்த  பெண்ணை   பெருமைப்படுத்த , 
பொருள்   தந்து  மணம்  கொள் !
 
அவள்   உன்  வலக்கரங்களுக்கு  சொந்தமாவாள் ! 
இல்லையேல்.. 
இயற்கையின்  இலக்கணங்களுக்கு  நீ  எதிராவாய்  !

கருணை   மிக்க   சமூகமே ,
களங்க மற்ற  சமுதாயத்தை   உருவாக்கும் !

எனவே      மானிடனே.. !!  
எளிமையை    நிறுத்தி ..
வறுமையை    துரத்தி..
இளமையின்  வாழ்வை   இனிதே  ஏற்ப்பாயாக........!!!
========================================

                                                   இவன் >>   > பிறைத்தமிழன்

ஞாயிறு, 15 மே, 2011

மாற்றம் ஒன்றே மாறாதது



















                      ஆராம்விரல் 



மாற்றம்  மட்டுமே  மாறாதது
 

நடந்து  முடிந்த  2011 ஆம்  ஆண்டின்  தமிழகத்திற்கான
பொதுத்  தேர்தல்
 

புதிய அரசுக்கு பிறைத்தமிழனின் வாழ்த்துக்கள் 


தமிழகத்தின்   வாக்காளர்கள்   தமிழகத்தை  
யார்  ஆட்சி  செய்ய  வேண்டும்  என்பதில்  கொண்டுள்ள
அக்கறையை   காட்டிலும்
யாருக்கு  வாக்களிக்க  கூடாது  என்பதில்  கொண்ட  உறுதியே
பெருவாரியான  மக்களை  வெளியே  வந்து  வாக்களிக்கச்  செய்தது

தி மு க தோற்றதால்  
அ தி மு க  வெற்றி  பெற்றிருக்கிறது  அது  சரித்திரம்  வாய்ந்த
வெற்றி  பெறுவதற்கான  சாதனைகள்  துளியும்
நினைவில்  இல்லாத  போதும்  கூட
அவர்கள்  கைகளில்  மிகப்பெரும்  வெற்றியை   தரப்பட்டிருக்கிறது

சாதனைகளை   சவாலாக  நிகழ்த்தி  சர்வ  சாமானிய

மக்களையும்  சென்றடைய  செய்த  அரசு   தி மு க வின் அரசு
சாதனையின்  பலன்களை  ரசித்து , ருசித்தவர்களும்  கூட

தி மு க வின்  சூரிய  சின்னத்தை   சுட்டிக் காட்ட
சூளுரைத்து  விரித்த  விரல்களால்  சுருக்கி  மடக்கி 
சுலபமாய்  குத்தினார்கள்  " முதுகில் " என்றே சொல்லலாம்
இது  எதனால் . ஏன் ,எப்படி ,எதற்கு ,ஆம்

மாற்றம்   மட்டுமே   மாறாதது   இம்முறை
மாற்றத்திற்கான   காரணத்தை   சரியாக
உணர்ந்திருப்பதாகவே   தோன்றுகிறது 

விரிக்கப்பட்ட  ஐந்து  விரல்களுக்கு  எதிராக
விமர்ச்சித்து  விரிவாக  விளம்பரப்  படுத்தப் பட்ட
விளங்கிக் கொள்ள  வேண்டிய  ஐந்து  விஷயம்

1 ,   ஸ்பெக்ட்ரம்  2 G அலைக்கற்றை  விகாரம்
2 ,  தமிழக  மீனவர்கள்  மீது  இலங்கை  நடத்தும் 
இரக்கமற்ற  அத்துமீறல் 
3 , ஜீரணிக்க  முடியாத  தமிழகம்  தழுவிய  மின்  வெட்டு
4 ,ஒத்த  ரூபாய்  அரிசியை  மாதமொரு  முறை   நுகர்வோரை  விட
மத்த  ரூபாய்  அரிசிகளின்    கடும்  விலை  உயர்வை  ஒவ்வொரு  நாளும்  
நுகர்கின்ற   அடித்தட்டு  மக்கள்  முதல்
நடுத்தர  மற்றும்  மேல்  மட்ட  வரையிலான  மக்களே  அதிகம்  என்பதை
ஆட்சியாளர்   நினைவில்  கொள்ளாதது

5 உழவர்  சந்தைக்குள்  அடங்காத  உலகமய  மாக்கப்பட்ட
ஊசி நூல் முதல் உயிர் காக்கும்  மருந்து வரை
உயிர்க்கொல்லி விஷம் போல் உயர்ந்துவிட்ட   விலைவாசி

{ உதாரணம் தங்கமும் ,பெட்ரோலும் கூட }
இதன்  விலை  உயர்வில்  மாநில  அரசுக்கு  என்ன  பாங்கு  என்பதை
உணரக்கூடிய  பொது  மக்களின்  பொது  அறிவுக் குறை

தமிழகத்தில்  ஐந்து வருடத்துக்கு முன்  அ தி மு க ஆட்சியில் 
விலைவாசிகள்  இப்படி ஏறினது இல்லை இந்த
கருணாநிதி ஆட்சியிலே அநியாய விலை என்று அங்கலாய்க்கும்
பாமர ,சாமானிய ,நடுத்தர வர்க்கத்தினர் கொண்ட உறுதியே ஆட்சி
மாற்றத்தை செயல்படுத்தியது


ஓரளவு  கட்டுப்படுத்தலாமே  தவிர  விலைவாசி  உயர்வு  என்பது
தவிர்க்க  முடியாதது  காலத்தின்  கட்டாயம்  ஓரளவு  என்ற

இதன்  ஏற்றத்தால்வுகளை  மக்கள்  ஏற்றுக்கொள்ளும் விதமாய்
பிரச்சனைகளை  அனுகத்தவறிய  அரசின்  மெத்தனம் மறுப்பதற்கு இல்லை
இனி எப்போதும் போல் நபிக்கையோடு ஐந்து ஆண்டுகள்
தி மு க  காத்திருப்பது சற்று சிரமமே ஏன் என்றால் புதிதாக
அரசியல் தொழிலை தொடங்கிய இளஞர்கள் இந்த ஐந்து ஆண்டு
இடைவெளியை   பயன்ப்டுத்த்க்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது



அத்தகைய  வாய்ப்புகளை  அ தி மு க  சுலபமாக  உருவாக்கித்தரும்
என்பதில்  சிறிதும்  ஐயம்  இல்லை  ஏன்  என்றால்  கடந்த கால அ தி மு க
செயல்  பாடுகள்  நிரூபித்  திருக்கிறது

நடுரோட்டில்  பிச்சை  எடுப்பவன்  கூட  நான் ஆளும்  கட்சிக்காரன்
என்று  சொல்லி  உயர்  அரசு  அதிகாரிகளையும்  எளிதாக  மிரட்ட  முடியும்
ஆட்சியாளர்களால் அரசு அதிகாரிகளும்  அசுரத்தனமாய் பந்தாடப்படுவார்கள்
இது போன்ற காரணங்களால்

ஆட்சியை விரும்பாதவர்கள் கூட சில நிர்பந்தங்களால்
ஆளும் கட்சி போர்வையில் உலவுவார்கள் அடுத்த தேர்தலை எதிர்நோக்கி
அப்போது அணிகள் மாறும் ஆட்சியையும் மாறலாம் அங்கே
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது புரிதலாகும்

====================================================================
                               இவன் >>    >> பிறைத்தமிழன்

திங்கள், 25 ஏப்ரல், 2011

பரிகாரமற்ற தீர்ப்பு

ஆறாம்  விரல்




          
  உதடுகள்   சிரிப்பது   பேருக்கு ! !
உறவுகள்  அழுவது  யாருக்கு ??
                                
==============================================================
நடந்து   முடிந்த   கொடூரக்கொலையில்   பாதிக்கப் பட்டவர்களுக்கான 
பரிகாரமற்ற    தீர்ப்பு  !

இராமநாதபுரம்   மாவட்டம்   ஆப்பனூர்    கிராமத்தை  சேர்ந்த 
சென்னை  வாழ்    முஸ்லிம்களின்   கொடூரக்  கொலை  வழக்கு 

இயற்க்கையன்றி   நிகழும்   எந்தவித மரணமும்  
கொலையே 
இன்னா  செய்தாரே  ஒருத்தல்  அவர்   நாண
நன்னயம் செய்துவிடல் !      இது 

எல்லா   நிலைகளுக்கும்  பொருந்தாது  என்பது  மட்டுமின்றி 
இரக்கம ற்றவர்கள்   நீக்கமற   நிறைந் திருக்கின்ற  உலகமிது 
 
கொலைக்கு   தண்டனை   கொலையே   ஆகும்!
கொலைக்குக்   கொலை , கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல்  என 
குற்றத்திற்கான    தண்டனை   அதன்   தன்மையிலேயே 
வழங்கப்பட    வேண்டும்   ஏன்    என்றால் ?

குற்றம்   செய்தவர்கள்   திருந்த   வேண்டும்   என்பதை   விட 
குற்றமே  நிகலாமல்  இருக்க  இது  சரியான வழி       
ஆயினும்    இன்றைய   காலகட்டத்தில்   உலகத்தில்   உய்ய 
உறவுகளால்    ஒன்றிணைக்கப் பட்ட   உழைப்பே 
மிகப்   பிரதானமாகி   விட்டபடியால்

பழிக்குப்  பலி   என்ற  தண்டனையை  விட  மிகச்சரியான
மேம்பட்ட   தண்டனையும்   உண்டு  அது

பாதிக்கப்  பட்டவர்களின்   மன்னிப்பும் , சிறியதோ , பெரியதோ
அவர்களின்   மணம்   விரும்பும்   தொகையுமே
வடுப் பெற்றவர்களின்   உள்ளத்தை   இதமாய்   வருடதக்கவையாகும்
இத்தகைய   ஏற்றமான   செயல்களே    இறைவனுக்கும்
ஏற்ப்புடையதாய்   உள்ளது 

மேற்கண்ட   எந்தவித   பரிகாரமும்   நிகழ்த்தப் படாமல்
முன்னூறு   குடும்பங்களை  சார்ந்த
ஏறக்   குறைய  தொள்ளாயிரம்  பேரை
அவர்கள்   விரும்பியோ   விரும்பாமலோ  அவர்கள்  மீது
ஏதாவது   ஒரு  தாக்கத்தை   ஏற்படுத்திய  கொலை  வழக்கு  

பதினய்ந்து  வருடங்களுக்குப்   பிறகு  2011 ல்   முற்றுப்  பெற்றது

இந்த  பதினைந்து  ஆண்டுகளில்  இரு   தரப்பாகிப் போன   மக்களிடம்
தாக்குதல்  இல்லையே  தவிர  வரும்  காலங்களில்  மீட்சி பெற  முடியா
பிற்ப் போக்கான  தாக்கங்கள்  உருப்பெற்றது    எப்படி ?

உறவுகளே  உலகம்  என  கட்டுக் கோப்பாய்
கட்டிக்காத்து  வந்தவர்கள் காணாமல்  போய் விட்டார்கள்
இது   காலத்தின்    கட்டாயம்

புதிதாக  பிறக்கும்   இளந்தளிர்கள்  தொட்டு  இளமை  கடந்து  நிற்கும்
மக்கள்வரை  உறவுகளை   உருக்குலைத்து   விட்ட
தலை   முறை   இடைவெளி !         ஏன் ?......எப்படி ?- ஆம்
இத்தகைய  நிலைக்கு     இவர்களே  காரணம் !

பாதை தவறிய கால்கள் ஊர்வந்து சேர்வதில்லை
என்ற தத்துவத்தை மாற்றி எழுதியவர்கள் 

சுமார்  பதினைந்து   தலைமுறைகளுக்கு  முன்
நெருஞ்சி   முற்ப்புதர்களை   நே  றுத்தி
பொட்டல்  காடுகளை  கட்டுத்தறிகளாய்  மாற்றி
களம்  அமைத்து  கால் ஊன்றி கண்ணியம்  காத்தவர்கள் 

அடிப்படை   வசதிகள்   கூட  இல்லாத   கிராமத்தில்
அடித்தட்டு  மக்களைப் போல்  வாழ்ந்த  இவர்கள் ,  கொஞ்சமும்
தொலை  நோக்கு  எண்ணமின்றி  சுடச் சுட என்று  சொல்வது போல
செல்வம்  ஈட்டுவதிலே  காலத்தை  வீண்  செலவு  செய்து விட்டார்கள்  

தன்  சந்ததிகளுக்கு   படிப்பறிவை  ஊட்டுவதில்
மெத்தனம்  கொண்டார்கள் 
முறையற்ற  உழைப்புக்கு  மூலதனமிட்டு
மூர்க்கத் தனமாய்  செல்வமும் ஈட்டினர்
செல்வத்தின்   செருக்கு  செயல்  திறன்  மாற்றியது ,  எளிதில்

உணர்ச்சி   வசப்  பட  லானார்கள்
உணர்ச்சி   வசப் பட்டவர்கள்
உறவுகளின்    உன்னத  மிக்க 
உயிரை    இழந்து   நின்றார்கள்
உறக்கம்   இன்றி  தவித்தார்கள் 

கலிகால   காலக் கணக் கியல்படி
கால்    நூற்றாண்டு களாய்
கனன்று      கொண் டிருந்தவர்கள்
பகிரப்பட்ட  பரிகாரமற்ற   தீர்ப்புக்குப்  பின்
 உள்ளக் குமுறல்  ஓரளவு  நீர்த்துப்  போனது  

புகட்டப்படாத  பாடங்கள்  புரிதலானது  இதுவரை 
விட்டேனா   பார்   என்றவர்கள்   விட்டே   நின்றார்கள் !
வெற்றியே    என்றவர்கள்   விதி   வழி   நொந்தார்கள் !!

கொண்டானும் , கொடுத்தானும்
கொலைப்பட்டம்    சுமந்தார்கள்  !
மாமனும் ,   மச்சானும்
மாற்றான்  போல் தெரிந்தார்கள்  !!
இனி ...........................................................
ஊருக்குள்   உதடுகள்   சிரிப்பது   பேருக்கு !
உள்ளுக்குள்   உறவுகள்   அழுவது  யாருக்கு ???
==============================================================
                                         
இவன் >>    >பிறைத்தமிழன்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

பேனாமுள்

பேனாமுள்

aaraam viaral


ஆறாம் விரலின் அரிச்சுவடி
==========================
நிலையற்றமாந்தருக்கு  நிகரற்ற மறைதந்த ,
இணையற்ற இறைவனுக்கே எல்லாப்புகழும் !