ஆராம்விரல்
மாற்றம் மட்டுமே மாறாதது
நடந்து முடிந்த 2011 ஆம் ஆண்டின் தமிழகத்திற்கான
பொதுத் தேர்தல்
புதிய அரசுக்கு பிறைத்தமிழனின் வாழ்த்துக்கள்
தமிழகத்தின் வாக்காளர்கள் தமிழகத்தை
யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் கொண்டுள்ள
அக்கறையை காட்டிலும்
யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் கொண்ட உறுதியே
பெருவாரியான மக்களை வெளியே வந்து வாக்களிக்கச் செய்தது
தி மு க தோற்றதால்
அ தி மு க வெற்றி பெற்றிருக்கிறது அது சரித்திரம் வாய்ந்த
வெற்றி பெறுவதற்கான சாதனைகள் துளியும்
நினைவில் இல்லாத போதும் கூட
அவர்கள் கைகளில் மிகப்பெரும் வெற்றியை தரப்பட்டிருக்கிறது
சாதனைகளை சவாலாக நிகழ்த்தி சர்வ சாமானிய
மக்களையும் சென்றடைய செய்த அரசு தி மு க வின் அரசு
சாதனையின் பலன்களை ரசித்து , ருசித்தவர்களும் கூட தி மு க வின் சூரிய சின்னத்தை சுட்டிக் காட்ட
சூளுரைத்து விரித்த விரல்களால் சுருக்கி மடக்கி
சுலபமாய் குத்தினார்கள் " முதுகில் " என்றே சொல்லலாம் இது எதனால் . ஏன் ,எப்படி ,எதற்கு ,ஆம்
மாற்றம் மட்டுமே மாறாதது இம்முறை
மாற்றத்திற்கான காரணத்தை சரியாக
உணர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது
விரிக்கப்பட்ட ஐந்து விரல்களுக்கு எதிராக
விமர்ச்சித்து விரிவாக விளம்பரப் படுத்தப் பட்ட
விளங்கிக் கொள்ள வேண்டிய ஐந்து விஷயம்
1 , ஸ்பெக்ட்ரம் 2 G அலைக்கற்றை விகாரம்
2 , தமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் இரக்கமற்ற அத்துமீறல்
3 , ஜீரணிக்க முடியாத தமிழகம் தழுவிய மின் வெட்டு
4 ,ஒத்த ரூபாய் அரிசியை மாதமொரு முறை நுகர்வோரை விட
மத்த ரூபாய் அரிசிகளின் கடும் விலை உயர்வை ஒவ்வொரு நாளும்
நுகர்கின்ற அடித்தட்டு மக்கள் முதல்
நடுத்தர மற்றும் மேல் மட்ட வரையிலான மக்களே அதிகம் என்பதை
ஆட்சியாளர் நினைவில் கொள்ளாதது
5 உழவர் சந்தைக்குள் அடங்காத உலகமய மாக்கப்பட்ட
ஊசி நூல் முதல் உயிர் காக்கும் மருந்து வரை
உயிர்க்கொல்லி விஷம் போல் உயர்ந்துவிட்ட விலைவாசி
{ உதாரணம் தங்கமும் ,பெட்ரோலும் கூட }
இதன் விலை உயர்வில் மாநில அரசுக்கு என்ன பாங்கு என்பதை
உணரக்கூடிய பொது மக்களின் பொது அறிவுக் குறை
தமிழகத்தில் ஐந்து வருடத்துக்கு முன் அ தி மு க ஆட்சியில்
விலைவாசிகள் இப்படி ஏறினது இல்லை இந்த
கருணாநிதி ஆட்சியிலே அநியாய விலை என்று அங்கலாய்க்கும்
பாமர ,சாமானிய ,நடுத்தர வர்க்கத்தினர் கொண்ட உறுதியே ஆட்சி
மாற்றத்தை செயல்படுத்தியது
ஓரளவு கட்டுப்படுத்தலாமே தவிர விலைவாசி உயர்வு என்பது
தவிர்க்க முடியாதது காலத்தின் கட்டாயம் ஓரளவு என்ற
இதன் ஏற்றத்தால்வுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாய்
பிரச்சனைகளை அனுகத்தவறிய அரசின் மெத்தனம் மறுப்பதற்கு இல்லை
இனி எப்போதும் போல் நபிக்கையோடு ஐந்து ஆண்டுகள்
தி மு க காத்திருப்பது சற்று சிரமமே ஏன் என்றால் புதிதாக
அரசியல் தொழிலை தொடங்கிய இளஞர்கள் இந்த ஐந்து ஆண்டு
இடைவெளியை பயன்ப்டுத்த்க்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது
அத்தகைய வாய்ப்புகளை அ தி மு க சுலபமாக உருவாக்கித்தரும்
என்பதில் சிறிதும் ஐயம் இல்லை ஏன் என்றால் கடந்த கால அ தி மு க
செயல் பாடுகள் நிரூபித் திருக்கிறது
நடுரோட்டில் பிச்சை எடுப்பவன் கூட நான் ஆளும் கட்சிக்காரன்
என்று சொல்லி உயர் அரசு அதிகாரிகளையும் எளிதாக மிரட்ட முடியும்
ஆட்சியாளர்களால் அரசு அதிகாரிகளும் அசுரத்தனமாய் பந்தாடப்படுவார்கள்
இது போன்ற காரணங்களால்
ஆட்சியை விரும்பாதவர்கள் கூட சில நிர்பந்தங்களால்
ஆளும் கட்சி போர்வையில் உலவுவார்கள் அடுத்த தேர்தலை எதிர்நோக்கி
அப்போது அணிகள் மாறும் ஆட்சியையும் மாறலாம் அங்கே
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது புரிதலாகும்
====================================================================
இவன் >> >> பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக