திங்கள், 25 ஏப்ரல், 2011

பரிகாரமற்ற தீர்ப்பு

ஆறாம்  விரல்




          
  உதடுகள்   சிரிப்பது   பேருக்கு ! !
உறவுகள்  அழுவது  யாருக்கு ??
                                
==============================================================
நடந்து   முடிந்த   கொடூரக்கொலையில்   பாதிக்கப் பட்டவர்களுக்கான 
பரிகாரமற்ற    தீர்ப்பு  !

இராமநாதபுரம்   மாவட்டம்   ஆப்பனூர்    கிராமத்தை  சேர்ந்த 
சென்னை  வாழ்    முஸ்லிம்களின்   கொடூரக்  கொலை  வழக்கு 

இயற்க்கையன்றி   நிகழும்   எந்தவித மரணமும்  
கொலையே 
இன்னா  செய்தாரே  ஒருத்தல்  அவர்   நாண
நன்னயம் செய்துவிடல் !      இது 

எல்லா   நிலைகளுக்கும்  பொருந்தாது  என்பது  மட்டுமின்றி 
இரக்கம ற்றவர்கள்   நீக்கமற   நிறைந் திருக்கின்ற  உலகமிது 
 
கொலைக்கு   தண்டனை   கொலையே   ஆகும்!
கொலைக்குக்   கொலை , கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல்  என 
குற்றத்திற்கான    தண்டனை   அதன்   தன்மையிலேயே 
வழங்கப்பட    வேண்டும்   ஏன்    என்றால் ?

குற்றம்   செய்தவர்கள்   திருந்த   வேண்டும்   என்பதை   விட 
குற்றமே  நிகலாமல்  இருக்க  இது  சரியான வழி       
ஆயினும்    இன்றைய   காலகட்டத்தில்   உலகத்தில்   உய்ய 
உறவுகளால்    ஒன்றிணைக்கப் பட்ட   உழைப்பே 
மிகப்   பிரதானமாகி   விட்டபடியால்

பழிக்குப்  பலி   என்ற  தண்டனையை  விட  மிகச்சரியான
மேம்பட்ட   தண்டனையும்   உண்டு  அது

பாதிக்கப்  பட்டவர்களின்   மன்னிப்பும் , சிறியதோ , பெரியதோ
அவர்களின்   மணம்   விரும்பும்   தொகையுமே
வடுப் பெற்றவர்களின்   உள்ளத்தை   இதமாய்   வருடதக்கவையாகும்
இத்தகைய   ஏற்றமான   செயல்களே    இறைவனுக்கும்
ஏற்ப்புடையதாய்   உள்ளது 

மேற்கண்ட   எந்தவித   பரிகாரமும்   நிகழ்த்தப் படாமல்
முன்னூறு   குடும்பங்களை  சார்ந்த
ஏறக்   குறைய  தொள்ளாயிரம்  பேரை
அவர்கள்   விரும்பியோ   விரும்பாமலோ  அவர்கள்  மீது
ஏதாவது   ஒரு  தாக்கத்தை   ஏற்படுத்திய  கொலை  வழக்கு  

பதினய்ந்து  வருடங்களுக்குப்   பிறகு  2011 ல்   முற்றுப்  பெற்றது

இந்த  பதினைந்து  ஆண்டுகளில்  இரு   தரப்பாகிப் போன   மக்களிடம்
தாக்குதல்  இல்லையே  தவிர  வரும்  காலங்களில்  மீட்சி பெற  முடியா
பிற்ப் போக்கான  தாக்கங்கள்  உருப்பெற்றது    எப்படி ?

உறவுகளே  உலகம்  என  கட்டுக் கோப்பாய்
கட்டிக்காத்து  வந்தவர்கள் காணாமல்  போய் விட்டார்கள்
இது   காலத்தின்    கட்டாயம்

புதிதாக  பிறக்கும்   இளந்தளிர்கள்  தொட்டு  இளமை  கடந்து  நிற்கும்
மக்கள்வரை  உறவுகளை   உருக்குலைத்து   விட்ட
தலை   முறை   இடைவெளி !         ஏன் ?......எப்படி ?- ஆம்
இத்தகைய  நிலைக்கு     இவர்களே  காரணம் !

பாதை தவறிய கால்கள் ஊர்வந்து சேர்வதில்லை
என்ற தத்துவத்தை மாற்றி எழுதியவர்கள் 

சுமார்  பதினைந்து   தலைமுறைகளுக்கு  முன்
நெருஞ்சி   முற்ப்புதர்களை   நே  றுத்தி
பொட்டல்  காடுகளை  கட்டுத்தறிகளாய்  மாற்றி
களம்  அமைத்து  கால் ஊன்றி கண்ணியம்  காத்தவர்கள் 

அடிப்படை   வசதிகள்   கூட  இல்லாத   கிராமத்தில்
அடித்தட்டு  மக்களைப் போல்  வாழ்ந்த  இவர்கள் ,  கொஞ்சமும்
தொலை  நோக்கு  எண்ணமின்றி  சுடச் சுட என்று  சொல்வது போல
செல்வம்  ஈட்டுவதிலே  காலத்தை  வீண்  செலவு  செய்து விட்டார்கள்  

தன்  சந்ததிகளுக்கு   படிப்பறிவை  ஊட்டுவதில்
மெத்தனம்  கொண்டார்கள் 
முறையற்ற  உழைப்புக்கு  மூலதனமிட்டு
மூர்க்கத் தனமாய்  செல்வமும் ஈட்டினர்
செல்வத்தின்   செருக்கு  செயல்  திறன்  மாற்றியது ,  எளிதில்

உணர்ச்சி   வசப்  பட  லானார்கள்
உணர்ச்சி   வசப் பட்டவர்கள்
உறவுகளின்    உன்னத  மிக்க 
உயிரை    இழந்து   நின்றார்கள்
உறக்கம்   இன்றி  தவித்தார்கள் 

கலிகால   காலக் கணக் கியல்படி
கால்    நூற்றாண்டு களாய்
கனன்று      கொண் டிருந்தவர்கள்
பகிரப்பட்ட  பரிகாரமற்ற   தீர்ப்புக்குப்  பின்
 உள்ளக் குமுறல்  ஓரளவு  நீர்த்துப்  போனது  

புகட்டப்படாத  பாடங்கள்  புரிதலானது  இதுவரை 
விட்டேனா   பார்   என்றவர்கள்   விட்டே   நின்றார்கள் !
வெற்றியே    என்றவர்கள்   விதி   வழி   நொந்தார்கள் !!

கொண்டானும் , கொடுத்தானும்
கொலைப்பட்டம்    சுமந்தார்கள்  !
மாமனும் ,   மச்சானும்
மாற்றான்  போல் தெரிந்தார்கள்  !!
இனி ...........................................................
ஊருக்குள்   உதடுகள்   சிரிப்பது   பேருக்கு !
உள்ளுக்குள்   உறவுகள்   அழுவது  யாருக்கு ???
==============================================================
                                         
இவன் >>    >பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக